Categories
தேசிய செய்திகள்

திடீரென மாயமான ரூ.2000 நோட்டு!… மீண்டும் வருகிறதா ரூ.1000?…. வெளிவரும் புது தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு…..!!!!!

தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் கடந்த 2016-ம் வருடம் பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட 1000 ரூபாய் நோட்டு வருகிற 2023 புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1ல் இருந்து புழக்கத்திற்கு வர இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்படுகிறது. மேலும் தற்போது உள்ள ரூ.2000 நோட்டை முழுமையாக தடை செய்து விட்டு, பழையபடி ரூ.1000 நோட்டை அரசு புழக்கத்தில் விட திட்டமிட்டு உள்ளதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது.

அண்மையில் 2018-19 வருடத்திற்கு பிறகு ரூ.2000 நோட்டை அச்சடிக்கவில்லை என மத்திய அரசு கூறிய நிலையில், இந்த வீடியோவானது அதிக மக்களை சென்றடைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மைத் தன்மை வாய்ந்தது என ஆய்வு மேற்கொண்டதில், இது முற்றிலும் போலியானது என தெரியவந்தது. ஆகவே தவறான செய்தி கொண்ட இந்த வீடியோவை யாரும் மற்றவர்களுக்கு பகிரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |