மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக பயன்படுத்தும் பொருள்களை விற்பனை செய்யும் கடைக்கு முன்பு மினிலாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரெனஅந்த மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த மினி லாரியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் இந்த விபத்தில் மினி லாரி தீயில் எரிந்து கருகியது. இதனையடுத்து மினி லாரியில் உள்ள பேட்டரியின் மின்கசிவால் தீப்பிடித்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.