மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்ரா ஹவுதியா கல்லூரி சார்பாக நடந்த மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போட்டியில் முதலாமாண்டு தமிழ் இலக்கிய துறையைச் சேர்ந்த மாணவி மாயா முதலிடத்தையும், மூன்றாம் ஆண்டு வணிகம் மேலாண்மையியல் துறையைச் சேர்ந்த மாணவி சாருமதி நாலாம் இடத்தையும் மற்றும் இரண்டாம் ஆண்டு வணிக மேலாண்மையியல் துறையைச் சேர்ந்த மாணவி கிருபா ஐந்தாம் இடத்தையும், ரித்திகா ஆறாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
இதனை அடுத்து அவர்களுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனச் செயலர் கம்பன் கிருஷ்ணன் மற்றும் இணைச் செயலர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன், கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள், விளையாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் சுசீலா, உடற்கல்வி ஆசிரியர் சூரியபிரபா, பேராசிரியர்கள் மற்றும் முதல்வர் ரேணுகா ஆகியோர் மாணவிகளை பாராட்டியுள்ளனர்.