Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபத்து…. அதிகாரிகள் ஆறுதல்…. நாகப்பட்டினத்தில் பரபரப்பு….!!

மினி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கத்தரிப்புலம் வரை மினி பேருந்து இயங்கி வந்துள்ளது. இந்த மினி பேருந்து வேதாரணத்தில் இருந்து 30-க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டு கத்தரிப்புலம் நோக்கி சென்று கொண்டிருக்கும் போது சந்தையடி பகுதியில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு இருக்கும் வயலில் கவிழ்ந்துள்ளது.

இதில் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் அனுசியா, சவுமியா, பிரியதர்ஷினி, தேவிகா, அனுஷா, சத்தியசீலன், கிருத்திகா, கௌசல்யா, விஜயராகவன், நடேசன், ஜோதிகா, சாந்தி மற்றும் சீதா ஆகிய 13 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து பேருந்து கவிழ்ந்ததும் அதில் இருந்தவர்கள் போட்ட அலறல் சத்தத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் மீட்கப்பட்ட நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் ரவிச்சந்திரன், கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் மற்றும் காவல்துறையினர், கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்ற நபர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |