கொரோனா ஊரடங்கால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் நாகை மாவட்ட விவசாயி ஒருவர் பழைய மோட்டார் இஞ்சினை கொண்டு மினி டிராக்டர்ரை உருவாக்கி சாதனை படைத்துள்ளர்.
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள கிளைஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பி ராஜன் என்பவர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த டூவீலர் மெக்கானிக் தொழில் நடத்திவருகிறார். தனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு, சோளம் பயிரிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கால் வயலில் களை வெட்டும், மண் அணைகவும் போதுமான ஆட்கள் கிடைக்காததால், பணிகளை செய்வதற்கு பழைய டூவீலர் என்ஜினை கொண்டு, மினி டிராக்டர்ரை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்.
ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 3 லிட்டர் பெட்ரோல் செலவில், நான்கு மணி நேரத்தில் களை வெட்டி, மண் அணைக்கலாம் என நம்பிராஜ் தெரிவித்துள்ளார். வேளாண்மை துறை மூலம் மானியம் கிடைத்தால் விவசாயிகளுக்கு மினி டிராக்டர்ரை உருவாக்கி தர தயாராக இருப்பதாக திரு நம்பிராஜன் உறுதியுடன் குறிப்பிட்டுள்ளர்.