மினி லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவத்தான் வட்டம் பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுங்கவாடியில் கட்டணம் வசூலிக்கும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரஞ்சித்குமார் வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லாரி திடீரென ரஞ்சித்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இதில் ரஞ்சித்குமார் பலத்த காயம் அடைந்துள்ளார். பின்னர் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்களால் ரஞ்சித்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்.