மாலத்தீவின் தலைநகரில் மக்கள் கூட்டம் நிறைந்த நெடுஞ்சாலையில், அமைச்சர், கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாலத்தீவின் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கும் அலி சோலே, மோட்டார் சைக்கிளில் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, வழியில் தடுத்து நிறுத்திய ஒரு நபர் திடீரென்று அவரை கத்தியால் குத்த முயன்றார். தடுக்க முயற்சித்த அமைச்சரை கழுத்து மற்றும் முகங்களில் குத்தியுள்ளார்.
எனவே, காயங்களோடு அமைச்சர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். அதன் பின், அங்கிருந்த மக்கள் அந்த நபரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் கத்தியை காட்டி மிரட்டியதால் பதற்றம் உண்டானது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.