Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு – கொரோனா நடவடிக்கை குறித்து விளக்கம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆய்வு செய்து வருகிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வெளி மாநில ரயில் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என்று கண்டறிய சோதனை நடத்தப்படும், காய்ச்சல், இருமல், மூச்சிறைப்பு இருந்தால் உடனே மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் 21 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா பாதித்த நபர் 2 கட்ட பரிசோதனைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார். நாளை முதல் ரயில்வே கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தவர்கள் மட்டும் பரிசோதனை செய்து கொண்டால் போதுமானது, சாதாரணமான இருமல், காய்ச்சல் இருந்தால் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 137பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |