நீலகிரியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காலில் இருந்த செருப்பை கழற்றுமாறு சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கி வைப்பதற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றார். அப்போது அமைச்சர் சீனிவாசன் நடந்து சென்றபோது அவரது செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. உடனே அங்கிருந்த ஒரு பழங்குடி சிறுவனை அழைத்து தம்பி இங்கே வாடா, செருப்பை கழற்றுடா என்று கூறியுள்ளார். அச்சிறுவனும் கழற்றி விட்டான்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. இந்த முகாம் 48 நாட்கள் நடக்க இருக்கிறது. முகாமை துவக்கி வைப்பதற்கு முன்பதாக விநாயகர் கோவிலில் வழிபடுவது வழக்கம். அப்படி கோவிலில் வழிபட போகும்போது இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடக்கும் போது நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.