இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி என்பது அரசுக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழ் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்தவகையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெற்றி குறித்து தனது கருத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதில் இடைத்தேர்தல் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் மீண்டும் அ தி மு கவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.இது தர்மத்திற்கு அதர்மத்திற்கும் இடையே நடந்த போர். இதில் தர்மம் மீண்டும் வென்றுள்ளது. தமிழகத்தை நல்லமுறையாக வழிநடத்த்தியதற்கு மக்கள் கொடுத்த ஒரு நற்சான்றிதழ் என்று இந்த நேரத்திலே நான் தேர்தல் வெற்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். தர்ம படைகளாக இருக்கின்ற பாண்டவர் படை முன்னாள் கௌரவ படை ஓடி ஒளிந்து இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.