இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்தார். மேலும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக 2 நாட்களுக்கு முன் பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரரவை துணை முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார். அதேபோல ஐ.ஐ.டி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் ஈபிஎஸ் ஆதரவு கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.