Categories
அரசியல்

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தை கிண்டல் செய்த அமைச்சர் ஜெயக்குமார் ..

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண்வேட்ப்பாளர் தங்கபாண்டி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார் 

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகின இதனை தொடர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்து வேட்புமனுக்களை தாக்கல் செய்து தற்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்

இதனை தொடர்ந்து தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளபெண் வேட்பாளர் தங்கபாண்டியனும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இந்த பிரச்சாரத்தை விமர்சனம் செய்துள்ளார் அவர் கூறியதாவது,

 

தங்கபாண்டியனும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தென்சென்னையில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் அந்த பிரச்சாரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெண் வேட்பாளரை பார்த்து மிகவும் அழகான வேட்பாளர் என்று வர்ணித்துள்ளார் இவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்துள்ளாரா அல்லது தனது திரைப்படத்திற்கு நடிகையை தேர்வு செய்ய உள்ளவன் தேர்வு செய்ய வந்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார் இதனையடுத்து அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டதை பார்க்கும் பொழுது புதிய பறவை படத்தில் நடித்திருக்கும் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜாதேவி ஆகியோரை போல் தோன்றுகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார் இது தற்பொழுது சர்ச்சைக்குரிய கருத்து பரவி வருகிறது

Categories

Tech |