Categories
மாநில செய்திகள்

படப்பிடிப்பு பணிகளை துவக்குவது குறித்து தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை!!

திரையரங்குகளை திறப்பது மற்றும் படப்பிடிப்புகளை துவக்குவது ஆகியவை குறித்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தற்போது தம்மை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாகவும், மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் திரையரங்குகள் மற்றும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சினிமா சம்பந்தமான எந்த ஒரு பணிகளும் நடைபெற்றவில்லை.

அதுபோல திரையரங்குகள் திறக்கப்படவில்லை. 4ம் கட்ட ஊரடங்கிலும் இந்த தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், திரையரங்குகளை திறக்க நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, சமூக இடைவெளியை கடைபிடித்து படப்பிடிப்பு பணிகள் நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |