Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

’மிக மிக அவசரம்’ படத்தின் நடிகையை பாராட்டிய கடம்பூர் ராஜூ..!!

’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ படத்தில் கதாநாயகியாக நடித்தவரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் “மிக மிக அவசரம்” இந்தப் படம் பெண் காவலர்கள் பணியில் இருக்கும்போது ஏற்படும் சிரமங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரிப்பாளரான இருந்த சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். இந்நிலையில் ’மிக மிக அவசரம்’ படம் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.

Miga miga Avasaram

’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினார். மேலும் இப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரீ பிரியங்காவை நேரில்அழைத்து படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக அமைச்சர் பாராட்டினார். இந்த நிகழ்வின் போது நடிகை ஸ்ரீ பிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர். இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் வரும் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

Categories

Tech |