மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து பொங்கல் பரிசு தர வேண்டும் என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரைக்கு வருகை தர இருக்கும் மோடியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது பொங்கலை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக அதனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்ற வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை பிரதமருக்கு எழுதியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களை அழைத்து பேசி சர்வதேச விமான நிலையமாக மதுரை விமான நிலையத்தை மாற்றுவது குறித்து முடிவெடுத்து பொங்கல் பரிசாக அதனை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.