Categories
அரசியல் மாநில செய்திகள்

மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துங்க… 2020 ல வந்துச்சு… அமைச்சர் சொன்ன பதில்..!!

மாவுப்பூச்சி கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்..

தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலம் ஈரோடு,கள்ளக்குறிச்சி, விழுப்புரம் பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க தகுந்த நிதி ஒதுக்கி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்..

இதற்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மாவுப்பூச்சி தாக்கும் சேதம் அதிகளவில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்த பூச்சி ஊடுருவியது. அப்போது தடுத்திருந்தால் இந்தளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்காது. இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்..

Categories

Tech |