கர்நாடகா மாநிலத்தில் ராஜினாமா செய்த 11 எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி அளிக்க ஆளும் கூட்டணி அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக 11 எம்.எல்.ஏ.க்கள் பேர் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரசுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என்ற கருத்தும் பரவி வருகிறது.
இதையடுத்து மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் ஆளும் கட்சியினரிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.இந்நிலையில் மத சார்பற்ற ஜனதா தள கட்சி எம்.எல்.ஏக்களின் ஆலோசனைக்கூட்டம் முதல்வர் குமாராசாமி தலைமையில் நடைபெற்றது.மேலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கான கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.
இது குறித்த தகவலை அக்கட்சியின் சட்ட மன்ற குழு தலைவர் சித்தராமையா சுற்றறிக்கையாக அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் அனுப்பியுள்ளார். இதில் ராஜினாமா செய்த 11 எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்வார்களா? என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க ஆளும் கட்சி முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.