தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 47 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும்,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் தண்ணீர் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசுக்கள் பரவி வருவதாகவும் முடிந்த அளவு வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.