Categories
Uncategorized மாநில செய்திகள்

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்..!!

டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாநில அரசு மருத்துவர் கூட்டமைப்பின் தலைவரான மருத்துவர் லட்சுமி நரசிம்மன் சேலத்தில் இன்று மாரடைப்பால் காலமானார். இவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லுரியில் அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட  மருத்துவர்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் செய்துள்ளார். அதில், டாக்டர் என்.லட்சுமி நரசிம்மனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சிறப்பான மருத்துவர்  மற்றும் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மறைவு மருத்துவ துறைக்கு பேரிழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Categories

Tech |