பாகிஸ்தானின் புதிய உளவுத்துறை தலைவர் நதீம் அன்ஜூம், தன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐஎஸ் என்ற உலக அமைப்பின் தலைவரான, பாயிஸ் ஹமீத் ஓய்வு பெற்றதால், நதீம் அன்ஜூம் என்பவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அந்நாட்டில், சமீபத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் செய்திகளில் வெளிவந்தது. எனினும், அதில் நதீமின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளிவரவில்லை. பாகிஸ்தானின் அமைச்சர் இது குறித்து தெரிவித்திருப்பதாவது, உளவுத்துறையின் புதிய தலைவர் நதீம் அன்ஜூம், அவரின் புகைப்படங்களையோ வீடியோக்களையோ செய்திகளில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
எனவே தான், கூட்டத்தில் அவர் கலந்துகொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதில் இல்லை என்று கூறியிருக்கிறார். நதீம், உளவுத்துறை தலைவராக பதவியேற்று அதிக நாட்கள் ஆகியும், அவரின் புகைப்படம் தற்போது வரை எந்த செய்தியிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற முன்னாள் ஜெனரல் அம்ஜத் சோயிப் கூறுகையில், ஒரு நாட்டின் உளவுத்துறை, தலைவராக இருப்பவர், பிறருக்கு அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும், என்னும் விதியை, அவர் பின்பற்றுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.