Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா தொற்று காலத்தில்… ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கிய… போக்குவரத்து துறை அமைச்சர்…!!

ராமநாதபுரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் தூய்மை பணியாளர் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் ஏழை பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செழியன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குலாம் முகைதீன், பேரூர் செயலாளர் வெங்கடேஷ் ராஜ், ஊராட்சி தலைவர் மணிமேகலை, முத்துராமலிங்கம், தென்னரசி செல்லபாண்டியன் மற்றும் மீனவர் அணி துணை அமைப்பாளர் பால்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்துள்ளனர்.

மேலும் நகர மாணவரணி செயலாளர் சிவபாலன், நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் ராம் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்  கொரோனா பெருந்தொற்று முடியும் வரை போக்குவரத்து துறை அமைச்சர் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் ஏழை எளிய பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |