அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்..
தமிழக சட்ட பேரவையில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று திமுக – அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது..
அதனை தொடர்ந்து இன்றைய விவாதத்தில், அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, “12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அதிக இடங்கள் தேவை ஏற்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினார்..
இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்..