பாளையங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்களுக்காக 24 மணி நேரமும் அயராது உழைக்கும் முதல்வர் நம் தமிழகத்திற்கு கிடைத்துள்ளார் என்று கூறி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர்.
மேலும் நம்முடைய அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி திமுகவினர் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் எப்படி 100 சதவீதம் வெற்றி பெற்றோமோ அதேபோலவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்று ராஜ கண்ணப்பன் பேசினார். பின்னர் நகர் புற உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெறுவது, மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.