Categories
மாநில செய்திகள்

அமைச்சரே ”தென்னிந்தியாவே இருக்காது” தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளர் சர்சை பேச்சு …!!

 இஸ்லாமியர்கள் குறித்து சர்சையாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சிக்கு  எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் புதிய சர்சையில் சிக்கியுள்ளது.

நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமிய மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசியதாக சர்சை எழுந்து. இதனிடையே அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இஸ்லாமிய மக்களை இழிவு படுத்தும் வகையில் நான் பேசவில்லை என்று விளக்கம் கொடுத்தார். ஆனாலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

Image result for தவ்ஹீத் ஜமாஅத்

இதனிடையே திருச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் காந்தி மார்க்கெட் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு  பேசிய மாநில பேச்சாளர் ரஹ்மத்துல்லா,அமைச்சரின் பேச்சு தொடர்ந்தால் “தென்னிந்தியாவே இருக்காது” என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |