Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சி”… ராஜேந்திர பாலாஜி சர்ச்சை… அதிமுகவில் பரபரப்பு..!!

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெ. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடலநலக்குறைவின் காரணமாக இறந்துவிட்டதால், மீதமுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா நன்னடத்தை விதிகளின் அடிப்படையில்  சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா மீது புதிய வழக்கு போடப்படுவதால் அவர் வெளியே  வருவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

Image result for சசிகலா ராஜேந்திர பாலாஜி

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்திலயாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, சசிகலா சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. விரைவில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதற்கு பிரார்த்தனை செய்கிறேன். அவர் சிறையில் இருந்து வந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரப்பாக பேசப்படுகிறது. அதிமுகவின் தலைமை, அமைச்சர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர்கள் சசிகலாவை விமர்சித்து வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |