இந்தியாவில் மின் தட்டுப்பாடு நிலவவில்லை என்று மக்களவையில் இன்று மத்திய அமைச்சர் ராஜ்குமார் சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்ற மக்களவையில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரு உறுப்பினர் நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் அதன் தேவை அளவு தொடர்பான கேள்விகளை கேட்டார். அதற்கு பதிலளித்த மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ராஜ்குமார் சிங், ”நாட்டில் தற்போது மின்தட்டுப்பாடு இல்லை. நாட்டில் நடப்பு ஆண்டு அதிகபட்ச நுகர்வாக 183 ஜிகா வார்ட் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த நுகர்வை காட்டிலும் 2 மடங்கு அளவுக்கு (365 ஜிகா வார்ட்) மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு தேவையான கட்டமைப்பு நம்மிடம் செயல்பாட்டில் உள்ளது’’ என தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசிடம் மின்சாரம் வாங்குவது தொடர்பாக மாநில அரசுகள் செய்துள்ள நீண்ட கால ஒப்பந்தங்களை தவிர்த்து தேவைப்பட்டால் மாநில அரசுகள் வாங்கிக்கொள்ளாம்.அரசிடம் தேவைக்கு அதிகமான மின்சாரம் இருப்பதால் மாநில அரசுகளும், மின்பகிர்மாக நிறுவனங்களும் எவ்வளவு மின்சாரம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.