Categories
தேசிய செய்திகள்

ஒன்னும் பயப்படாதீங்க…. மாஸ் காட்டிய அமித்ஷா…. மகிழ்ச்சியில் மருத்துவர்கள் …!!

மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு அதிக உறுதியுடன் இருக்கிறது என உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்

கொரோனா தொற்றை தடுக்க முதல் வரிசையில் நின்று போராடும் சுகாதார ஊழியர்களின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய டாக்டர்கள் சங்கம் நாடு தழுவிய ஒயிட் அலெர்ட் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  மருத்துவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் இன்று மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும்படி டாக்டர்கள் அமைப்பு கேட்டுக்கொண்டது.

“வெள்ளை கோட்டுடன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கவும். ஒயிட் அலர்ட் ஒரு எச்சரிக்கை மட்டுமே” எனவும் ஐ.எம்.ஏ மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எழுதியிருந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் அமித் ஷா ஆகியோர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவர்கள் மற்றும் அவர்கள் சங்கத்துடன் உரையாடி உள்ளனர். அப்போது மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு அதிக உறுதியுடன் இருக்கிறது. மருத்துவர்களை பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதோடு ஒயிட் அலெர்ட் எனும் அடையாள போராட்டத்தை கைவிடுமாறும்  கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |