Categories
தேசிய செய்திகள்

வெறும் 4 நாட்களில் அமைச்சர் ராஜினாமா…. பீகார் அரசியலில் திடீர் திருப்பம் …!!

பீகார் மாநில தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் பதவியேற்ற வெறும் நான்கு நாட்களில் கல்வித்துறை அமைச்சர் மேவாலால் ராஜினாமா செய்திருக்கின்றார். மேவாலால் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு எம்எல்ஏவாக இருந்து தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர் எம்எல்ஏவாக இருக்கின்றார். ஐக்கிய ஜனதா தள கட்சியில் மிக முக்கியமான ஒரு தலைவராகவும் அவர் இருந்து வருகின்றார். இவர் ஏற்கனவே பீகார் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியபோது நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

துணைவேந்தர் பதவி முடிந்தவுடன் அவர் ஐக்கிய ஜனதா தள கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டிருந்தார். அதற்குப் பிறகுதான் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு வருவதை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, மக்களும் அவரை தேர்ந்தெடுத்து அவர் தற்போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கடுமையாக கையில் எடுத்து இருந்தார். குறிப்பாக இராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்ரீ குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிக்கக்கூடிய இடமாக அமைச்சரவையை நிதிஷ்குமார் மாற்றிவிட்டார் என கடுமையான குற்றச்சாட்டுகளை  முன்வைத்திருந்தார். இதனையடுத்து தற்போது அமைச்சர் பதவியை மேவாலால் ராஜினாமா செய்துள்ளார்.

Categories

Tech |