Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்த திட்டம் வந்தாலும் எதிர்க்குறீங்க”…. ஆக்கபூர்வமா செயல்படுங்க அண்ணாமலையாரே!…. அட்வைஸ் செய்த அமைச்சர்….!!!!

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்சத்து எட்டு வடமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் மதிவேந்தன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அட்வைஸ் செய்து பேசியுள்ளார். அதாவது எந்த நல்ல திட்டம் வந்தாலும் பாஜக எதிர்த்து நிற்கிறது.

இவ்வாறு செய்யாமல் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்கபூர்வமான பணிகளில் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சியில் நிலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 437 பேரிடம் இருந்து ரூ.1,640 கோடி மதிப்பிலான கோவில் நிலங்களை திமுக அரசு மீட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |