Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிக்கு… “2 தொகுதிகளின் இடைத்தேர்தல் ராசியானது”… அமைச்சர் செல்லூர் ராஜூ.!!

அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

Related image

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது பற்றி  பேசியதாவது, அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சியை நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் திட்டங்களை எந்த எதிர்க்கட்சிகளாலும் குறை சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |