அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் போட்டியிடும் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் களம் காண்கின்றனர்.
இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக இன்று விக்கிரவாண்டி அருகே மேல்காரணையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடந்தே தீரும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான மனுக்களும் டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.