Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழிவாங்க நேரம் வந்துவிட்டது!”…. ஓபிஎஸ்ஸை மறைமுகமாக எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் பேசும் போது நான் தலைவர் பதவியை யாரிடமும் கும்பிடு போட்டு வாங்கவில்லை. அதேபோல் குழந்தை போல் தவழ்ந்து சென்றும் வாங்கவில்லை என்று கூறி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓபிஎஸ் முதலில் காலில் உள்ள ஸ்கேட்டின் சக்கரத்தை செந்தில் பாலாஜியை கழற்றி விட்டு உட்கார சொல்லுங்கள்.

அவர் குனிந்து குனிந்து பதவியை வாங்கிய படங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று கூறி அவரை ஆஃப் செய்தார். அதை கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் கைத்தட்டி சிரித்தனர். ஏற்கனவே இந்த சம்பவம் செந்தில் பாலாஜியின் மனதில் ஆறாத வடுவாய் உள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியை பிடித்து செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராகியுள்ளார்.

ஆனால் அவரை விடாமல் தொடர்ந்து அவருக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக மின்துறை பற்றிய பல்வேறு புகார்களை அறிக்கைகளாக வெளியிட்டு அவரை கோபப்படுத்தி வருகின்றனர். இதனால் செந்தில் பாலாஜி, ஓபிஎஸ்ஐ பழிவாங்க முடிவு எடுத்து விட்டதாகவும் அதற்காக மறைமுகமாக அவரிடம் “கடந்த காலங்களை நினைத்து பார்க்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அரசியல் ஆர்வலர்கள் கொளுத்திப் போடுகின்றனர்.

Categories

Tech |