Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் உரையின்போது தூங்கி வழிந்த ஊராட்சித் தலைவர்கள்..!

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பில், அமைச்சர் பேசியபோது பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி வழிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பு தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக வகுப்பில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பிரதிநிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில், தருமபுரி ஆட்சியர் மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமை தலைவர் ஆர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கலந்துகொண்டு ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பல அறிவுரைகளையும் வழங்கினார். அப்போது, முகாமில் கலந்துகொண்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி வழிந்துள்ளனர். மேலும், அமைச்சர் உரையாற்றியபோது ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணத்தலைவர்கள் தூங்கி வழியும் காட்சி இணயைத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |