திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தன்னுடைய முதல் சுற்று பயணத்தை கோவையில் திட்டமிட்டுள்ளார். இன்று இரவு விமான மூலம் கோவைக்கு செல்லும் உதயநிதி இரவு கோவையில் தங்கி விட்டு மறுநாள் கிறிஸ்துமஸ் நிகழ்வை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதன் பிறகு இன்று கோவைக்கு செல்லும் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட திமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி கோவையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு நாளை காலை 10 மணி அளவில் செல்கிறார். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி கலந்து கொள்ள இருக்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதோ அந்த லிஸ்ட்,
மேலும் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தல் வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் கோவை சுற்றுப்பயணம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.