அதிமுகவில் உட்கட்சி மற்றும் வெளி கட்சி என எந்த பூசலும் இல்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு 4 மணி நேர ஆலோசனைக்கு பிறகு இரவு 9.30க்கு மேல் பத்திரிக்கையாளர் சந்திப்பின்றி வேட்பாளர் அறிவிப்பு வெளியாகியது . இதையடுத்து தனக்கு சீட் கிடைக்காத அதிர்ப்தியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் முக.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தார் .
ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இவர் முதலவர் மற்றும் துணை முதல்வர் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்ததார். மேலும் இவர்கள் பிஜேபி_க்கு கொத்தடிமையாக செயல்படுகின்றனர். கட்சிக்குள் இருக்கைகளை தூக்கி அடித்துக்கொள்ளும் சண்டையும் ஏற்படுகின்றது என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இவரின் இந்த பேட்டி அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதை உணர்த்தியது .
இந்நிலையில் மதுரையில் கட்சி தொண்டர்களிடம் ஆலோசனைக்கூட்டம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு சந்திப்பு இருக்கிறது . தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்ற தயாராக இருக்கிறார்கள் . அவர்களை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவோம் . முதலமைச்சரின் பாராளுமன்றத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளோடு , கொடுக்கின்ற அறிவுரைகளை செயல்படுத்தி வெற்றி கனியை புரட்சித்தலைவி அம்மாவின் நினைவு கோவில் சமர்பிப்போம் என்றார்.
மேலும் அவரிடம் அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பதால் மதுரையை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளதாக கேள்வி எழுப்பியதற்கு ஊடகச் செய்திகள் பூதாகரமாக கற்பனையாக வெளிவருகின்றது . எங்கள் கட்சிக்குள் உட்கட்சி , வெளி கட்சி என எந்த பூசலும் கிடையாது . தேர்தல் காலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால் கூடுதலாக மதுரையை பிரித்துள்ளோம் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார் . நடந்தவற்றை பார்க்கும் போது முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை போல அதிமுக_வில் உட்கட்சி பூசல் இருக்குமென்று கருதப்படுகின்றது.