தமிழகத்தில் சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் வேலுமணி தெரிவவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி என உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப சொத்துவரி,கழிவுநீர்வரி,குடிநீர் வரி மற்றும் குப்பை வரி போன்றவை வசூலிக்கப் பட்டு வருகின்றன. இதில் சொத்து வரியில் தமிழக அரசு திருத்தம் செய்து புதிய அறிக்கை ஒன்றை 2018 ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதில் சொத்துவரி 50லிருந்து 100 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. சொத்துவரியை திடீரென்று உயர்த்தியது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி சொத்து வரி அதிகரிப்பு தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் தமிழகத்தில் சொத்து வரியை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.