தமிழகத்திற்கு பிரதமர் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்ப்பது அநாகரீக அரசியல் என்று அமைச்சர் வேலுமணி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் #gobackmodi என்ற ஹேஸ்டேக்கை தமிழர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர். அந்தவகையில், ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று காலை சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi, ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது.
இந்நிலையில் மோடிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது குறித்து அமைச்சர் வேலுமணி ட்விட் செய்துள்ளார். அதில், நாகரீகத்தின் தொட்டிலாக திகழும் தமிழகத்திற்கு பாரத பிரதமர் அவர்கள் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்க்க வேண்டும், டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்கிற அநாகரீக அரசியல் என்பது எந்த மாதிரியான மனநிலை, எந்த மாதிரியான பண்பாட்டு நிலைப்பாடு! என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
நாகரீகத்தின் தொட்டிலாக திகழும் தமிழகத்திற்கு பாரத பிரதமர் அவர்கள் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்க்க வேண்டும், டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்கிற அநாகரீக அரசியல் என்பது எந்த மாதிரியான மனநிலை, எந்த மாதிரியான பண்பாட்டு நிலைப்பாடு!
— SP Velumani (@SPVelumanicbe) September 30, 2019