தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலாகிறது. இதுவரை தமிழகத்தில் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ட்விட் செய்துள்ளார். அவர் கூறியதாவது, “லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதில் புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், திருப்பூரை சேர்ந்த 48 வயதான மற்றொருவர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல மதுரையை சேர்ந்த 54 வயதான நபர் கொரோனா தொற்று இருப்பதால் ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார்.
#coronaupdate: 3 new #COVID19 positive cases in TN. 25 Y M Purasaivakkam, London return at #RGGH. 48 Y M Tiruppur,London return at #ESI Hosp. 54 Y M,MDU – Annanagar at #Rajaji Hosp. All 3 in isolation & treatment. @MoHFW_INDIA @CMOTamilNadu #Vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 23, 2020
மேலும் மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் இவர்; இவருக்கு எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.