Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் கோவை மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் கொரோனா பரிசோதனை ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்றார்.

ஏற்கனவே சென்னை, நெல்லை, திருவாரூர், தேனி, சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் உள்ளது என்றும், மேலும் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளதால்  தமிழகத்தில் கொரோனா ஆய்வு மையம் 7ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |