Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா… 15 ஆக உயர்வு!

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல் படுத்துகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.

அதில், “அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா  தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய 74 வயது முதியவருக்கும், 52 வயது பெண்ணுக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயதான பெண்ணுக்கு சென்னை கீழ்ப்பாக்கம்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் என்பது அதிகமாக இருக்கக்கூடிய நிலையில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

Categories

Tech |