திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவில் தான் வெறும் வாழ்த்தும், பாராட்டும் கிடையாது, எங்களுக்கு வேலை செய்கின்ற இலக்கை நிர்ணயங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு உழைப்பாளியாக.. தன்னுடைய தாத்தா, தந்தை போல் இருக்கக்கூடிய தலைவராக அமர்ந்து கொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்து, இன்றைக்கு நாம் தொண்டர்களாக பணியாற்ற காத்திருக்கிறோம். முதலமைச்சர் அவர்கள் என்ன பணிகளை கொடுக்கிறார்களோ ? இயக்கத்தினுடைய தலைவராக அவர் என்னென்ன பணிகள் கட்டளை இடுகிறார்களோ ? அது எல்லாம் செய்யக்கூடிய முதல் தொண்டனாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். நான் உறுதியாக சொல்வேன்… எனக்கு என்றைக்குமே ரோல் மாடல் சேகர்பாபு அவர்கள் தான்..
மாவட்ட செயலாளர்களை பொறுத்த வரைக்கும், பல நேரங்களில் பார்த்து, பார்த்து அதில் கொஞ்சம் மாற்றி அதை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதை பார்க்கும்போது சேகர்பாபு அவர்களை பார்த்து நான் காப்பி அடித்தேன் என்ற மாதிரி இருக்காது.பள்ளி கல்வித்துறையாக இருந்து கொண்டு, நான் காப்பி என்று சொல்லக்கூடாது. இருந்தாலும் சொல்கிறேன்.
சேகர்பாபு அண்ணன் அவர்கள் என்னென்ன நல்லது செய்கிறார்கள், அதை எங்களுடைய மாவட்டத்திற்கு தகுந்தாற்போர் நாங்கள் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாங்கள் அதை பெற்று இருக்கிறோம் என்று சொல்லும்போது, அந்த உத்வேகத்தை நாங்கள் பெறுகின்றோம் என தெரிவித்தார்.