Categories
அரசியல் மாநில செய்திகள்

உளறிக் கொட்டும் அமைச்சர்கள்..! முட்டு சந்தில் நிக்க போறீங்க ?.. CM ஸ்டாலினுக்கு அட்வைஸ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என சொல்கிறவர்கள்  உண்மையாகவே அரசியல் தெரிந்து பேசுகிறார்களா ? இல்லையென்றால் எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் எதிர்க்கின்றார்களா என்பதை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுகவின் பி-டீம் ஆக  இருக்கக்கூடிய உதிரி கட்சிகள் சொல்ல வேண்டும்.

நாங்கள்  11 மணிக்கு ஆட்சிக்கு வந்தோம் என்றால், 11. 7 மணிக்கு மண்ணை எல்லாம் சுரண்டலாம் என்று சொன்ன ஒரு அமைச்சர் இன்று ஆட்சியில் இருக்கிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் பால்வளத்துறை அமைச்சர் மீது…. பால்வளத்துறை அமைச்சருடைய ஊழல் நாங்கள் சொல்லவில்லை. அவர் வாய் திறந்தால் அவரே ஊழலை ஒத்துக் கொள்கிறார், ஏதோ உளறுகிறார்.

அதில் இரண்டு ஊழல் வந்து விடுகிறது. அதில் பால்வளத்துறை அமைச்சருடைய ஒரு ஒரு பேட்டியையும் பார்த்தீர்கள் என்றால்… அதனுடைய பேச்சை நன்றாக பார்த்தாலே அதில் ஊழல் இருக்கும். ஏனென்றால் அவருக்கு என்ன பேசுவது என்றே தெரியாமல் உளறி விடுவார். இதே போலத்தான் ஒவ்வொரு  அமைச்சர்களும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

மா.சுப்பிரமணியன் அவர்களும் அதே வரிசையில் தான் பேசுகின்றார்களே தவிர,  அதில் அவர் சொன்ன கருத்து ஆழமான கருத்து. இவர்களாகவே  உளறி,  உளறி நம்முடைய முதலமைச்சரை முட்டு சந்தில் நிறுகிறார்களா ? இல்லையா ? என்று பாருங்கள். தமிழகத்தில் நடக்கத்தான் போகிறது என அண்ணாமலை விமர்சித்தார்.

Categories

Tech |