மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற மாதம் இரண்டாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் ஒருமாதம் சிகிச்சை பெற்றுவந்த அமித்ஷா ஆகஸ்ட் 31ம் தேதி குணம் அடைந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் வீட்டுக்கு வந்த பின்னரும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது நேற்றிரவு 11 மணிக்கு அவர் ஏய்மஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திடீரென்று அமித்ஷாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் இருமுறை அமித்ஷா மருத்துவமனைக்கு சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.