நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில்,
கோயில்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் :
- கட்டுப்பாடு மண்டலங்களில் பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும்.
- கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதியில் மட்டுமே கோயில்களை திறக்க அனுமதி.
- கோவிலுக்குள் நுழை வரிசையாக நிற்கும் பக்தர்கள் குறைந்தபட்சம் 6 அடி தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.
- கோவில் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் சோப்பு மற்றும் தண்ணீரில் கை, கால்களை கழுவ வேண்டும்.
- கோவிலினுள் அமர சமூக தூரத்தை பராமரிக்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
- கோவிலில் உள்ள சிலைகள், புனித புத்தகங்களை தொட அனுமதி இல்லை.
- கோவில்களில் பெரிய கூட்டங்கள், சபை நடத்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.
- ஆலையங்களில் பதிவு செய்யப்பட்ட பக்தி இசை பாடல்கள் இசைக்கலாம் பாடகர் அல்லது பாடும் குழு அனுமதிக்ககூடாது.
- ஒருவருக்கொருவர் வாழ்த்தும் போது உடல் தொடர்ப்பை தவிர்க்கவும்,
- பொதுவான பிராத்தனை பாய்கள் வழங்குவதை தவிர்க்கவும், பக்தர்கள் தங்கள் சொந்த பிராத்தனை பாய் அல்லது துணியை கொண்டு வர வேண்டும்.
- பிரசாதம் விநியோகம், புனித நீரை தெளித்தல் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.
- மதத் தலங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தினால் அடிக்கடி சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
- சமூக இடைவெளி பின்பற்றி அன்னதானம் வழங்கப்பட வேண்டும், கூட்டம் தவிர்க்கப்படுவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.