பள்ளிகொண்டான் அருகில் மினிவேன் கவிழ்ந்து விபத்துகுள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மினிவேன் ஒன்று இஞ்சி ஏற்றிக்கொண்டு வேலூருக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினிவேன் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டான் அருகில் உள்ள எஸ். என் பாளையம் தேசிய நெடுஞ்சாலை வளைவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது மினிவேனின் டிரைவர் அவருடைய சுயநினைவை இழந்ததால் திடீரென சாலையின் தடுப்புச் சுவரை தாண்டி சென்று மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் அவருடன் வந்த ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் மினிவேன் கவிழ்ந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.