மின்கசிவு காரணமாக பற்றி எரிந்த வீட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீடு திடீரென மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.
மேலும் வீட்டில் இருந்த ஆறு பவுன் தங்க நகை வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.