லண்டனில் நதியில் சிக்கிக்கொண்ட குட்டி திமிங்கலத்தை காப்பாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு லண்டனில் தேம்ஸ் நதியில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று இரவு 7 மணிக்கு Richmond Lock படகின் உருளையில் ஒரு குட்டித் திமிங்கிலம் சிக்கியது. இதனால் அடிபட்ட அந்த திமிங்கலத்தை காப்பாற்றும் முயற்சியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் 3-4 மீட்டர் நீளத்தில் இருக்கும் Minke திமிங்கலம் தான் இது என்று கருதப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து ராயல் நேஷனல் லைஃப் போட் நிறுவனம் சுமார் ஒன்பது மணிக்கு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் திமிங்கலம் உயிரோடு இருப்பதற்காக பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் மீட்பு குழுவினர் அதன் மீது நீரை ஊற்றி கொண்டிருக்கின்றனர். மேலும் இதனைக்கான நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு கூடியதால் காவல் துறையினர் தண்ணீரின் விளிம்பிற்குள் அவர்களை வரவிடாமல் தடுத்து வருகின்றனர்.