பிரான்ஸ் நாட்டில் கட்டுமான பணிகளின் போது தீடிரென மின்கோபுரம் சரிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் வடக்கிலுள்ள பாரா மாகாணத்தில் பகாஜா என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மின்கோபுரம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது தீடிரென மின்கோபுரம் சரிந்து விழுந்ததில் அங்குள்ள பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை அறிந்த மீட்புக்குழு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். அதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மின்கோபுரமானது எவ்வாறு சரிந்து விழுந்தது என விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.