இங்கிலாந்தில் உள்ள டீசைட் கடற்கரையில் அரியவகை மீன் திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட அட்லாண்டிக் பசிபிக் கடலில் காணப்படும் அரிய வகை திமிங்கலங்களுள் ஒன்றான மின்கே திமிங்கலங்கள் மிகவும் சிறிய வகை திமிங்கல இனத்தை சேர்ந்தவை ஆகும். இந்த மின்கே திமிங்கலங்கள் அதிகபட்சமாக 26 முதல் 29 அடி வரை நீளம் கொண்டவை என்று கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக இந்த மின்கே திமிங்கலங்களில் இரையை தேடி திசைமாறி செல்லும் குட்டி திமிங்கலங்கள் கடற்கரைக்கு செல்வதாக எண்ணற்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று டீசைட் கடற்கரையில் நடைபயணம் மேற்கொண்ட உள்ளூரை சேர்ந்த பியோனா ரோபோத்தம் என்பவர் இந்த அரிய வகை மின்கே திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இந்த மின்கே திமிங்கலம் குறித்து அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹம்பர் கடலோர காவல்படையினர் அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்து பார்த்துள்ளனர்.
அப்போது அது ஒரு மின்கே திமிங்கலம் என்பதையும், பாலூட்டி இறந்துவிட்டதாகவும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். மேலும் “இந்த திமிங்கலம் 10 அல்லது 12 மீட்டர் நீளம் உடையது என்றும், அது தற்போது இறந்துவிட்டதாகவும்” ஹம்பர் கோஸ்ட்கார்டின் எனும் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் இந்த திமிங்கலமானது சுமார் 40 மீட்டர் தொலைவில் தண்ணீருக்குள் இருந்ததுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அந்த திமிங்கலத்தை பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் மீட்பு குழுவினர் சில அளவீடுகளைக் கொண்டு ஆய்வு செய்துள்ளனர். மேலும் ஒரு மருத்துவர் மற்றும் கடலோர காவல்படையினருடன் சென்ற ஆய்வு குழு ஒன்று அந்த மின்கே திமிங்கலத்திற்கு நோய் அல்லது காயங்கள் ஏதேனும் ஏற்பட்டிருக்கிறதா ?என்று ஆய்வு செய்துள்ளனர். இந்த திமிங்கலம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு கடற்கரையிலிருந்து அவை அதிகாரபூர்வமாக அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இது குறித்து மக்களிடம் பேசிய அதிகாரிகள் கடற்கரையிலிருந்து இந்த திமிங்கலத்தை அகற்றும் வரை யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியதோடு, உயிருடன் அல்லது இறந்துபோன விலங்குகள் ஏதேனும் கடற்கரையில் தென்பட்டால் செட்டேசியன் ஸ்ட்ராண்டிங்ஸ் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளனர். இது போன்ற திமிங்கலம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்குள்ள குறுகிய கால்வாய் பகுதியில் இருந்த உருளைகளுக்கு நடுவில் சிக்கி கிடந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த லண்டன் தீயணைப்பு துறையினர் மற்றும் துறைமுக அதிகாரிகள் ஒன்று சேர்ந்து அந்த கால்வாய் பகுதியில் உள்ள உருளைக்குள் சிக்கியிருந்த திமிங்கலத்தை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த வகை திமிங்கலங்கள் தற்செயலாக கரைக்கு வரும் போது சிக்கி விடுவதாக பிரிட்டிஷ் டைவர்ஸ் மரைன் லைஃப் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஜார்விஸ் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.