Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து பெய்யும் கனமழை…. வெள்ளத்தில் மூழ்கிய மின்மோட்டார்…. குடிநீர் வழங்குவதில் சிக்கல்….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் மின்மோட்டார்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் வசிக்கின்ற பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கொளத்தூர் பாலாறு கரையோரம் உள்ள கிணற்றில் இருந்து குழாய்கள் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் பாலாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக களத்தூர் ஏரி தற்போது நிரம்பி வழிகிறது. இதனை அடுத்து வெள்ளப்பெருக்கால் பனப்பாக்கம் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் கிணறு,  நீரேற்றும் அறை, மின் மோட்டார்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் மின் மோட்டார்களை இயக்கி பனப்பாக்கம் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வழங்க பேரூராட்சியின் சார்பாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக மற்றும் நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |